டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து
இந்தியா முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் மருத்துவ பரிசோதனை ஆய்வகம் இருக்கும் ஒன்பதாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்பு வீரர்களின் துரிதமான செயல்பாட்டால் மக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.