தனி ஆளாக புலியை விரட்டியடித்த மூதாட்டி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள காந்தல்லூர் பாம்பன்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜோணி. வனப்பகுதியை ஒட்டிய வீட்டில் இவரது மனைவி ராஜம்மாள்(69) உடன் வசித்து வந்தார்.
15 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோணி இறந்த நிலையில், ராஜம்மாள் மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வரும் அவர் தனக்குத் துணையாக நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார்.
வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் அங்கு புலிகள் நடமாட்டமும் இருக்கும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாத்துகளைப் பிடிக்க புலிகள் வந்த நிலையில் கிராமத்தினர் அதனை விரட்டினர்.
இந்நிலையில், நேற்று முந்தினம் மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடிய புலி ராஜம்மாளின் நாயைத் தாக்க முயன்றுள்ளது. நாயின் சத்தத்தை கேட்ட ராஜம்மாள் வெளியில் வந்து பாக்கையில் புலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு, சுதாரித்துக் கொண்டு தடியால் புலியைத் தாக்கியுள்ளார். தொடர்ந்து, ராஜம்மாளையும் புலி தாக்க முயன்றதால், நாயுடன் வீட்டிற்க்குள் சென்றுள்ளார். வீட்டில் இருந்து தீப்பந்தத்துடன் வெளியில் வந்த அவர் புலியை விரட்டியுள்ளார்.
தீப்பந்தத்தைப் பார்த்த புலி பின்வாங்கி ஓடியுள்ளது. புலி தாக்கியதில் நாயின் கழுத்து, தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தனி ஆளாக புலியை விரட்டிய மூதாட்டியின் தைரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்,