தொடர்ந்து குறையும் கொரோனா…நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்பு தீவிரமாக இருந்தது.
தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதில்,
* புதிதாக 60,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.
* புதிதாக 2,726 பேர் உயிரிழந்துள்ளனர்.
* நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.
* நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,13,378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 25,90,44,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.