உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்!

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் நபரான ஜி்யோனா சனா காலமானார்.
இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக்குழந்தைகள் உள்ளனர். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரிய இவர், நேற்று மதியம் 3 மணியளவில் காலமானார். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவர், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இவரது இந்த மரணம் மிசோரம் மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மிசோரம் மாநில முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.