70 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், அதன் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

தினமும் காலை 9 மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


* புதிதாக 84,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,93,59,115 ஆக உயர்ந்தது.

* புதிதாக 4,002 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,67,081 ஆக உயர்ந்துள்ளது. 

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,291,311 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,79, 11,384ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,80,690 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாட்டின் இதுவரை 24,96,00,304 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…