தடுப்பூசிக்கான ஜிஎஸ்டி வரியில் மாற்றமில்லை…நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று(12.6.2021) 44 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல மாநிலங்களின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ரெம்டெசிவிர் மருந்து, ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர், வெண்டிலேட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், கொரோனா பரிசோதனை கருவி, சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட பெரும்பாலான கொரோனா தடுப்பு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படும்.

தடுப்பூசிகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசு 75 சதவிகிதம் தடுப்பூசிகளை வாங்கும்போது அதற்கான ஜிஎஸ்டி வரி செலுத்தப்படும். அதில் இருந்து கிடைக்கும் 70 சதவிகிதம் வருமானம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *