என்ன மம்தா பானர்ஜிக்கு திருமணமா? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?

தமிழக மக்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மீது கொண்ட பற்றால் தங்களது குழந்தைகளுக்கு அவர்களின் பெயர்களைச் சூட்டி அழகு பார்ப்பது புதிது ஒன்றுமல்ல.
ஆனால், அப்படி வைக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரின் பெயர் திருமணப் பத்திரிக்கையில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமண அழைப்பிதழில் இந்த குழப்பம் அரங்கேறியுள்ளது.
இந்தத் திருமணப் பத்திரிக்கையில் மணமகனின் பெயர் சோசலிசம் என்றும், மணமகளின் பெயர் மம்தா பானர்ஜி என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த திருமண பத்திரிக்கையை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த பத்திரிக்கை உண்மையா பொய்யா என்று விசாரித்த போது இது உண்மையான திருமண பத்திரிக்கை தான் என்பது தெரிய வந்தது.
இது குறித்து மணமகள் வீட்டில் கூறியதாவது, மணமகளின் தாத்தா காங்கிரஸ் கட்சியில் நாட்டம் கொண்டவர் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது மிகுந்த பற்று கொண்டவர் என்றும் தெரிவித்தனர். அதன் காரணத்தாலேயே தனது பேத்திக்கு அவரது பெயரை சூட்டியதாக கூறப்படுகிறது.
மணமகனின் பெயர் குறித்து விசாரித்தபோது, கம்யூனிச கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் மணமகனுக்கு சோசலிசம் என பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த புதுவிதமான திருமண அழைப்பிதழ் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மணமகன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.