மூன்றாவது நாளாக குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், அதன் பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,91,83,121
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 94,052
இதுவரை குணமடைந்தோர்: 2,76,55,493
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,51,367
கரோனா உயிரிழப்புகள்: 3,59,676
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 6148
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 11,67,952
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 23,90,58,360 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.