மோடியின் தாடியை ஷேவ் செய்ய மணியாடர் அனுப்பிய டீக்கடைக்காரர்
கொரோனா காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அனில் மோர் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.
அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு மணியாடர் மூலம் நூறு ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், இந்தப்பணத்தில் மோடி தாடியை ஷேவ் செய்து கொள்ள வேண்டும் எனவும், எதையாவது வளர்க்க வேண்டும் என்றால் நாட்டு மக்களின் வேலை வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பினையும், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதை அதிகப்படுத்துங்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.