பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா அக்கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவின் தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அவர் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க கோரி அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களில் ஜிதின் பிரசாதாவும் ஒருவர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிதின் பிரசாதா கடந்த 2001-ல் இளைஞர் காங்கிரஸ் பிரிவின் பொதுச் செயலாளராக தனது அரசியல் பணியை தொடங்கியவர். 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பணியாற்றியவர். 

கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிபிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *