உத்தரபிரதேசத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூகம்…அதிர்ச்சியில் காங்கிரஸ்

உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால், இப்போதிலிருந்தே பாஜக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 30 ஆண்டுகால பணி அனுபவம் பெற்ற மாஜி தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே, தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிக மிக நெருக்கமானவரான அனுப் சந்திர பாண்டேவின் இந்த நியமனம் விவாதங்களை கிளப்பி உள்ளது.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக பிராமணர்களை ஒதுக்கி வைப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதனால், இந்தத் தேர்தலில் பிராமணர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பிராமணர்களின் முகமாகக் கருதப்படும் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்துள்ளது முக்கிய தேர்தல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.