புதுச்சேரியில் பார்களுக்குத் தடை

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போதும் கொரோனா பாதிப்பு முழுமையாக குறையாத காரணத்தால் ஜூன் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்துகள், கார், ஆட்டோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து கரோனா விதிகள் படி மாலை 5 மணி வரை இயங்கலாம்.
கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுக்கடைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்களுக்கு அனுமதியில்லை.