மூன்றாவது அலையையும் எதிர்கொள்ளத் தயார் – அரவிந்த் கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதனால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அங்கு தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து ஊரடங்கிலும் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரும் திங்கள் முதல் மெட்ரோ ரயில்கள் 50 சதவீத பயணிகளுடன் செயல்படவும், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால், “ இரண்டாவது அலையை டெல்லி வென்றுள்ளது. புதிய வகை வைரஸ்களை கண்டறிய இரண்டு புதிய ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

கொரோனாவின் மூன்றாவது அலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். டெல்லியில் 19,420 டன் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும்,150 டன் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இந்திரபிரசாதா கேஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடக்கிறது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *