மோசமான மொழி கன்னடமா? கூகுள் மன்னிப்பு

பொதுவாக, நமக்குத் ஒரு விஷயம் பற்றித் தெரியவில்லை என்றால் உடனே நம் மனதிற்கு வருவது கூகுள் தான். தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் அனைவரின் கைகளிலும் மொபைல்கள் இருப்பதால் தேடுவதும் எளிதாகியுள்ளது.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் மீது கன்னட மொழி பேசும் மக்கள் கோபத்தில் உள்ளனர். கூகுளில் ’இந்தியாவின் மோசமான மொழி’ எது என ஆங்கிலத்தில் தேடினால் கன்னடம் என பதில் வந்துள்ளது.

இதைப் பார்த்த கன்னட மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கூகுள் நிறுவனத்திற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர்.

முக்கியமாக இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த செயலுக்கு கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனம் கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் தவறாக வெளியான பதிவுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *