பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் கொடுத்த இளைஞர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு 22 வயது நிரம்பிய அந்த இளைஞர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
போதைக்கு அடிமையானதால் அதிலிருந்து மீள சிறைக்குச் செல்ல ஆசை பட்டதாகவும், அதன் காரணமாகவே இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.