சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி!

இந்தியாவில், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகத் தான் நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், கல்லூரிகளில் சேர்க்கை தொடர்பாக குழப்பங்கள் வராமல் இருக்கவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கூடாது என பல மாநிலங்களும் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜூன் 1 ஆம் தேதி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதி மன்றம் மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படும் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், “மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து 3 வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும்” என பதிலளித்தார்.

அதற்கு உச்சநீதி மன்றம் குறைந்தது இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். தினமும் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெளிப்படையாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *