அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தலை நடத்துவோம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் மக்களை அச்சுறுத்தி வந்த நிலையிலும் தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை சமீபத்தில் நடத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் பலராலும் கண்டனத்திற்கு உள்ளானது. சமூக ஆர்வலர்கள் பலரும் தேர்தல் ஆணையம் தேர்தல் பொதுக்கூட்டங்களை அனுமதித்து கொரோனா பரவலுக்கு வழி வகுத்ததாகவும் குற்றம்சாட்டி வந்தனர்.
கொரோனா சூழலில் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
இந்நிலையில், இன்று தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் திட்டமிட்டப்படி தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கொரோனா உச்சத்தில் இருந்த போதும் பீகார், மேற்குவங்கம் மாநிலங்களில் தேர்தலை நடத்தியுள்ளோம் என தலைமைத் தேர்தல் அதிகாரி சுசில் சந்திரா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.