பிளஸ் 2 தேர்வு குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது இந்தியாவின் பல மாநிலங்களிலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் +2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள், துணைவேந்தர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த சூழ்நிலையில், சிபிஎஸ்இ, +2 பொதுத்தேர்வு தொடர்பான முடிவை ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதற்கிடையே, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிரதமர் மோடி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு பிளஸ் 2 தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.