மேற்கு வங்கத்திற்காக பிரதமர் காலில் விழத் தயார்…மம்தா உருக்கம்!

யாஷ் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட வந்த பிரதமர் நடத்திய கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா தாமதமாக வந்ததாகவும், பிரதமரை புறக்கணித்ததாகவும் கூறப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த மத்திய அரசு மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரையும் திரும்ப்ப பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மம்தா, “இந்த கூட்டம் முன்னரே ஏற்பாடு செய்யவில்லை. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருகிறது.
மேற்கு வங்கத்தில் மட்டும் மத்திய அரசு குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? எனது காலில் விழுந்தால் தான் மேற்கு வங்கத்திற்கு உதவுவேன் என பிரதமர் கூறினால், அதனை செய்ய நான் தயார்.
ஆனால், என்னை அவமானப்படுத்தாதீர்கள்.மாநில விவகாரங்கள் தொடர்பான கூட்டங்களில், அதிகாரிகள் எப்போது பங்கேற்றார்கள். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததால், நீங்கள் அதுபோன்று நடந்து கொள்கிறீர்கள்.
நீங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்தும் தோல்வி அடைந்துள்ளீர்கள். எங்கள் மீது தினமும் கோபத்தை காட்டுவது ஏன்? வெள்ளச்சேதம் ஆய்வுக்கூட்டத்தில் கவர்னருக்கும், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் என்னவேலை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.