கேரளாவில் விரைவில் வரவிருக்கிறது ஸ்மார்ட் கிச்சன் திட்டம்!

கேரள சட்டமன்றத் தொகுதியில் அமோக வெற்றி பெற்று பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடித்து.
தேர்தல் பரப்புரையின் போது பெண்களுக்காக ஸ்மார்ட் கிச்சன் அமைக்கப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று தேர்தல் அறிக்கையில் அத்திட்டத்தை வருகிற ஜூலை 10-ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.
இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்களின் வீட்டு வேலையைக் குறைக்கவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், ஜூலை 10 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தை செயல்படுத்த மூன்று பேர்கொண்ட செயலாளர் நிலை குழு வழிகாட்டுதல்களையும் பரிந்துரைகளையும் அளிக்கும். இது பெண்களின் வீட்டு பணிச்சுமையைக் கணக்கிட்டு, அதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.