யாஸ் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு…மம்தா பானர்ஜி கவலை!
வங்க கடலில் உருவான யாஸ் புயல் இன்று கரையைக் கடந்தது. இந்த யாஸ் புயலினால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி யாஸ் புயலினால் மேற்கு வங்கத்தில் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், புயலின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 3 லட்சம் ஊழியர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.