இந்திய அரசின் புதிய சட்டம் மக்களின் தனியுரிமையை பாதிக்கும் என வாட்ச் அப் வழக்குப் பதிவு

சமூக வலைதளங்களில் மத்திய அரசு மீது தவறான கருத்துகளைத் தெரிவித்து வதந்தி பரப்புவர்களைக் கண்காணிப்பதற்காக, சமூக வலைதளங்களுக்கு புதிய சட்ட விதிகளை மத்திய அரசு அறிவித்தது. மேலும், இதை ஏற்காத நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பயனாளர்களின் தரவுகளை கண்காணித்து, சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோரின் விவரங்களை உடனடியாக அரசுக்கு தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, ஓவ்வொரு நிறுவனமும் சமூக வலைத்தள குறைதீர்ப்பு அதிகாரி, தொடர்பு அதிகாரி, புகார்களை கவனித்து தீர்வு காணும் அதிகாரி, ஆதாரமற்ற, பொய்யான கருத்துகளை கண்காணித்து அதை நீக்குவதற்கான அதிகாரி என அதிகாரிகளை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த புதிய சட்டவிதிகளை ஏற்பதற்கான காலகெடு நேற்றுடன் முடிவடைந்திருந்த நிலையில், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் வாட்ச் அப் நிறுவனம், இப்படி பயனாளர்களின் தரவுகளைக் கண்காணிப்பது அவர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருக்கும் என்று கூறி ஏற்க மறுத்து, இந்த புதிய சட்டவிதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *