மத்திய அரசுக்கு முதலமைச்சரின் வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடித்துக் கொண்டு தான் இருக்கும் என விவசாய சங்கங்கள் தெரிவித்ததிருந்தது.

இந்நிலையில், அவர்கள் போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள் ஆகியுள்ளது. இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத்தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள் ஆகின்றன; அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *