கேரளாவின் சபாநாயகராக எம்.பி ராஜேஷ் தேர்வு

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து கேரளாவின் 15 ஆவது சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ரகீம் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் ஆகியோரும் அடுத்தடுத்து பதவிபிரமாணம் எடுத்துக் கொண்டனர். மொத்தம் 136 எம்.எல். ஏக்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் தேர்வு நடைபெற்றது. சட்டசபையில் இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்.டி.எப்) மெஜாரிட்டி பலம் இருந்ததால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினருமான எம்.பி.ராஜேஷ் 15 ஆவது கேரள சட்டசபை சபாநாயக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.