பாபாவை காப்பாற்றிய அமைச்சர்!

பதஞ்சலி நிறுவனத்தில் தலைவர் பாபா ராம் தேவ் அண்மையில், அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரித்திருந்தார். ”அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல். லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் உயிரிழக்கிறார்கள். ரெம்டெசிவிர், ஃபேபிஃப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டாலும் கொரோனாவை குணப்படுத்தவில்லை” என்று கூறியிருந்த அவருக்கு மருத்துவர்கள் தங்களது கடும் கண்டணத்தைத் தெரிவித்திருந்தனர்.

அவரது, கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால் வழக்குத் தொடரப்படும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு எச்சரித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், இது குறித்து பாபா ராம் தேவி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், அமைச்சர் ஒருவரின் தலையீட்டால் இந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. த்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதி அவரின் கருத்துக்களைத் திரும்பப் பெற கேட்டுக்கொண்டார். அந்தக் கடிதத்தில், மக்களால் பெரிதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மனிதாரகிய நீங்கள் கூறும் கருத்து பெரிதும் மதிக்கப்படும். களப்பணியில் உலகம் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டுள்ள கொரோனா போர் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உங்களின் அவதூறான, துரதிர்ஷ்டமான கருத்துக்களை திரும்பப் பெறுவீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பின்னர் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், “சுகாதாரத்துறை அமைச்சரே உங்கள் கடிதம் கிடைத்தது. நான் என்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…