ஆசியாவிலேயே இவர் தான் நம்பர் 1 பணக்காரர்…யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். ப்ளூம்பெர்க் தகவலின்படி இவரது சொத்து மதிப்பு 76.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.

முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 66.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.

கொரானா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு அதானி குழுமம் அதிக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை இந்த குழுமத்தின் சந்தை மதிப்பு 6.5 மடங்குக்கு உயரந்திருக்கிறது. ஆனால், இதே காலத்தில் சென்செக்ஸ் 68 சதவீதமும் ரிலையன்ஸ் பங்கு 78 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கின்றன. எனினும், கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவின் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *