மே 24-ல் உருவாகும் யாஸ் புயல்!

இரண்டு நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தில் கரையைக் கடந்தது. இந்த டவ் தே புயலினால் குஜராத்தில் பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் பலர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணத்தை அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது அடுத்த புயல் உருவாகி வருகிறது.
வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வரும் 24 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் 26 ஆம் தேதி மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய கடற்கரையை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு யாஸ் புயல் என ஓமன் பெயர் சூட்டியுள்ளது.