திருடரான புரோகிதர்! வீடியோவில் அம்பலம்…மாட்டிக்கிட்ட பங்கு
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்ரானில் மே16ம் தேதி ஞான சங்கர் தாஸ் மற்றும் வசந்தா ஆகியோருக்கு உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி மந்திரங்கள் முழங்கி திருமணம் செய்து வைக்க புரோகிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.
அப்போது, மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகள் அனைத்தும் மஞ்சள் குங்குமம் தட்டில் வைத்து மணமேடையில் பூஜை செய்யப்பட்டது. பூஜை நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்தார்.
குண்டுமணிகளை காணாமல் அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும் சமாதானமாகி திருமணம் நடந்து முடிந்தது. ஆனால், புரோகிதர் வசமாக சிக்கியுள்ளார். திருமண வீடியோவில் அவர் தங்கத்தைத் திருடி பாக்கெட்டில் போடுவது தெளிவாக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருமண வீட்டிலேயே திருடிய புரோகிதரை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.