சிறப்பாக செயல்பட்ட ஷைலஜாவுக்கு ஏன் பதவி இல்லை?

தமிழகத்தைப் போன்று கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில், பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
கேரள அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. கேரளாவின் முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவியேற்க உள்ளார். அவருடன் சேர்ந்து அனைத்து அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
ஆனால், முதல்வர் பினராயி விஜயனைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைவரும் புதிய முகங்கள். முந்தைய அமைச்சரவையில் இருந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை.
முக்கியமாக, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஷைலஜா, கொரோனா முதல் அலை பரவிலின் போது, சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசின் பாராட்டையும் பெற்றிருந்தார். ஆனாலும் அவருக்கு புதிய அமைச்சரைவையில் இடமில்லை.
”இது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியில் கட்சி எடுத்த முடிவு. இதை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. புதிய சுகாதாரத் துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் பதவியேற்க உள்ளார்.