குஜராத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி…பிரதமர் மோடி அறிவிப்பு!

அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் நேற்று முன்தினம் குஜராத்தில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியது. இதனால் பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

மேலும் டவ் தே புயல் நிவாரணப் பணிகளுக்காக குஜராத்திற்கு ரூ.1000 கோடி இடைக்கால நிதியுதவி அளித்துள்ளார்.

புயலால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *