கரையைக் கடந்தது டவ்-தே புயல்!

அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுபெற்று டவ்-தே புயலாக வலுபெற்றது. இந்தப்புயல், குஜராத் மாவட்டத்தில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது, மணிக்கு 185 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையோரங்களில் இருந்த இரண்டு லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.

இந்நிலையில், நேற்று(17.5.2021) இரவு குஜராத்தின் போர்பந்தர் அருகே கரையைக் கடந்தது. புயலால் மணிக்கு 165 முதல் 185 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும், கரையைக் கடக்கும் போது, குஜராத் மற்றும் மும்பையின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

சூறாவளி காற்று காரணமாக மரங்களும், மின் கம்பங்களும் விழுந்துள்ளது. தயாராக இருந்த மீட்புப் பணி வீரர்கள் பாதிப்பை சரி செய்து வருகின்றனர். ற்போது டவ்தே புயலானது வலுவிழந்து, டையூ அருகே மையம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *