இந்தியாவில் மீண்டும் பப்ஜி!இதுவும் பப்ஜி மாதிரி தான் ஆனா பப்ஜி இல்ல!
இந்தியாவில், சீனாவின் செயலிகளுக்கு தடைவிதிக்கப்பபோது, அந்தப்பட்டியலில் பப்ஜி எனப்படும் மொபைல் விளையாட்டு செயலியும் இருந்தது. இதனால், பப்ஜியில் மூழ்கிக் கிடந்த இளைஞர்களும், குழந்தைகளும் அதற்கு மாற்றாக வேறு மொபைல் கேம்களில் விளையாட்டி வந்தனர். ஆனால், பப்ஜி அளவுக்கு எதுவும் அவர்களை ஈர்க்கவில்லை.
இதைப் புரிந்து கொண்ட தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’ பப்ஜி மொபைல் கேமை போலவே Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்ததுள்ளார். பிரத்யேகமாக இந்தியாவிற்காக மட்டுமே இந்த மேக் வடிவமைக்கபட்டுள்ளது.
தற்போது, இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ப்ளேஸ்டோரில் Battlegrounds Mobile India என்ற கேமை தேடி, அதில் முன்பதிவு என்ற Tab-ஐ அழுத்த வேண்டும். அதே போல், இந்தியாவில் செயலி பயன்பாட்டிற்கு வந்த உடன், தானாகவே Install செய்யலாம் என்றும் தேர்வையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், முன்பதிவு செய்வதன் மூலம் செயலி பயன்பாட்டிற்கு வந்த பிறகு பயனாளிகள் விளையாடும் போது பல ரிவார்டுகளை பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. பப்ஜியில் இருந்த சகல வசதிகளும் இதிலும் இருக்கும் கூடுதலாக பயனர்களின் தனிநபர் தகவல்களை பாதுகாக்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.