அதி தீவிர புயலாக கரையை கடக்கும் டவ் தே புயல்!

அரபிக் கடலில் உருவாகி உள்ள டவ்-தே புயல் இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் அதிதீவிர புயலாக குஜராத் மாநிலம் போர்பந்தல் மற்றும் மஹூவா பகுதிக்கு உட்பட்ட கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் பொது மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் டையூ பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இந்தப் புயலின் சூறாவளி காற்றால் மரங்கள் ஆங்காங்கே வேருடன் பெயர்ந்துள்ளன, சில இடங்களில் மின்சார சேவையும் தடைபட்டுள்ளது. நாடே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தப் புயலும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.