கேரளாவில் நீடிக்கப்படும் ஊரடங்கு!

இந்தியாவில் கொரோன இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால், மாநிலங்களில் நிலவும் தொற்று பரவலுக்கு ஏற்ப மாநில அரசுகள் தனித்தனியாக கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதனையடுத்து, கேரளாவில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் மே 8 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை(16.5.2021) உடன் ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில், ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தபடும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன், “தொற்று கட்டுக்குள் வராத பகுதிகள் மற்றும் நோயாளிகள் அதிகரிக்கும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. எனவே தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 16-ம் தேதி (நாளை) முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *