விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி…. பிரதமர் மோடி அறிவிப்பு!

உழவர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக 19 ஆயிரம் ரூபாய் கோடியை
அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் 3 தவணையாக மத்திய அரசு வழங்கி வந்தது.

அதன் ஒரு பகுதியாக இன்று பிரதமர் நரேந்திர மோடி 9 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்துள்ளார்.

மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் முதன் முறையாக இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் விவசாயிகள் பல இன்னல்களை சந்தித்த போதிலும் தானிய விளைச்சலில் விவசாயிகள் புதிய சாதனையை எட்டியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *