சிறையிலிருந்தே வெற்றி!
விவசாயிகளின் தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான அகில் கோகோய் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியதால் யுஏபிஏ (UAPA)சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நடைபெற்ற தேர்தலில் சிறையில் இருந்தே அசாம் மாநிலம் சிவசாகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மக்கள் தீர்ப்பை மதித்து அவரை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுயுறுத்துகின்றனர்.