விசாரணையும் ஜூம்ல தான்… தீர்ப்பும் ஜூம்ல தான்!
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/04/f017df2a-b615-4500-bab6-18e16021fae5_16x9_1200x676.jpg)
இந்தோனிசியாவில் கிட்டத்தட்ட 100 பேருக்கு ஜூம் மூலம் விசாரணை செய்து மரண தண்டணைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா உலகின் எல்லா நாடுகளையும் பாதித்தது. மேலும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களையும் கொரோனா பலிகொண்டது.
இந்தோனிசியாவில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா அச்சம் இன்னும் குறைந்தபாடில்லை. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு நிகழ்வுகளும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணிகள் நடைபெற்றது.
இதற்கிடையே குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விசாரிக்கும் நீதித்துறையில் வீட்டிலிருந்தபடியே நீதிபதிகள் விசாரணை செய்து வந்தனர். கடந்த 8 மாதங்களாக 100 மேற்பட்ட குற்றவாளிகளை ஜூம் வீடியோகாலில் விசாரணை செய்து அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.