உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் என்.வி. ரமணா

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ பாப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை எஸ்.ஏ பாப்டே பரிந்துரைத்திருந்தார்.

இவரின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தார். நேற்று, எஸ்.ஏ பாப்டேவிற்கு நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் திருப்தியுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, என்.வி. ரமணாவிற்கு இன்று காலை குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *