இறப்பைக் கூட கிண்டலடிக்கும் பாஜக நிர்வாகிகள்

சிபிஐஎம் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, தனது மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த பதிவில் தனது மகனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார்.
இதற்கு, பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தனர். ஆனால், பாஜக தலைவர் மிதிலேஷ் திவாரி சீதாராம் யெச்சூரியின் மகனின் இறப்பை கிண்டல் செய்வது போல் ஒரு கருத்தைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சீனாவின் ஆதரவாளர் சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி சீன கொரோனா காரணமாக காலமானார்” என தெரிவித்துள்ளார். இறப்பைக் கூட கிண்டல் செய்ததற்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.