ராஜஸ்தானில் பெண்குழந்தையை வரவேற்க ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த குடும்பம்!
ராஜஸ்தானைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் 35 வருடங்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்குழந்தையை வரவேற்க ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளது அந்த குடும்பம்.
இந்த ஹெலிகாப்டரின் வாடகை 4.5 லட்சம் ரூபாயாம். இந்த குழந்தைக் கடந்த மாதம் ராஜஸ்தானில் உள்ள நாக்பூரில் பிறந்துள்ளது. தொடர்ந்து அந்த குழந்தை தனது தாய் வழி பாட்டி – தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் தனது தந்தையின் வீட்டுக்கு திரும்ப உள்ளது. அதற்காக தற்போது ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளது.பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் அந்த குடும்பத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.