மே, ஜீன் மாதங்களுக்கு 5 கிலோ தானியம் இலவசம்

சென்ற ஆண்டு கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பிக்கும் போது, இந்தியா முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏழை எளிய மக்கள் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.

இதனால், குறிப்பிட்ட சில மாதங்களில் அனைத்து ரேஷன் அட்டை வாடிக்கையாளர்களுக்கும் மத்திய அரசு உணவுத் தானியங்களை அளித்து வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டும் கொரோனா பாதிப்புகள் குறையவில்லை. பல மாநிலங்களில் தொற்றைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 80 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *