விமான டிக்கெட் கூட குடுக்குறோம் நீங்க வந்தா மட்டும் போதும்!
வரும் 15 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த முறை அங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியை ஒட்டியுள்ள கவுதம் புத் நகர் மாவட்ட கிராமங்களில் உள்ளாட்சி வேட்பாளர்கள் லட்சங்களைக் கொட்டி செலவு செய்கிறார்கள். ஓரிரு வாக்குகளில் வெற்றி கைமாறி போய்விடும் என்பதால் வேட்பாளர்கள் வாக்களர்களை கவனமாக சேகரித்து வருகின்றனர்.
மேலும், இந்த மாநிலத்தைச் சேர்ந்த சிலர் வேலைகளுக்காக வெளியூர்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்களை ஓட்டு போட வர வைக்க வேண்டும் என்பதற்காக விமான டிக்கெட் கூட எடுத்துத் தருகிறோம் என கூறியுள்ளார்களாம் சில வேட்பாளர்கள்.