தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, கேரளாவிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றி இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மாநில அரசுகளே தனியாக கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாக உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 9 மணி முதல் கால 5 மணி வரை ஊரடங்கு இருக்கும். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருமணம் போன்ற வைபவங்களுக்கும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி. சந்தைகள் மற்றும் கடற்கரையும் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் கேரளாவிலும், இன்று முதல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு இருக்கும். பொதுப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *