மேற்கு வங்கத்தில் அமைதியாக நடந்து வரும் 5 ஆம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.
நடைபெற்ற நான்கு கட்ட தேர்தலிகளிலும் தொடர்ந்து வன்முறை வெடித்து வந்தது. ஆனால், 4 ஆம் கட்டத் தேர்தலின் போது, வன்முறை அதிகமாகவே அதனைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய் துப்பாக்கிச் சூட்டில் 4 பொது மக்கள் இறந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பலர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் 5 ஆம் கட்டத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை, 36.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 ஆம் கட்ட தேர்தலின் போது, ஏற்பட்ட வன்முறையை போல் இன்னொரு சம்பவம் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 48 மணிநேரத்துக்குப் பதிலான 72 மணிநேர பொது அமைதி அமல்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.