12 ஆண்டுகளுக்கு பின் முடி வெட்டிய இளம்பெண்!

அனைவருக்கும் ஏதேனும் ஒரு பிடித்தமான விஷயம் இருக்கும்.சிலருக்கு பாடல் கேட்பது பிடிக்கும் ஒரு சிலருக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான செயலாக இருக்கும்.ஆனால்,குறிப்பிட்ட சிலருக்கே வித்தியாசமான செயல்களை செய்வது பிடித்தமான செயலாக இருக்கும்.அது போல ஒரு வித்தியாமான நிகழ்வு குஜராத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத்தின் காந்தி நகரைச் சேர்ந்த நிலான்ஷி படேல் தனது முடியை நீளமாக வளர்க்க வேண்டும் என எண்ணியுள்ளார்.இதற்காக தனது 6 வயதிலிருந்து முடி வெட்டாமல் தனது கூந்தலை மிக நீளமாக வளர்த்து வந்துள்ளார்.இதன் மூலம் உலகின் மிக நீண்ட கூந்தலை உடையவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.இதற்காக 12 ஆண்டுகளாக தனது முடியை வெட்டாமலே வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று நிலான்ஷி 6 வயது முதல் 18 வயது வரை ஆசையாக வளர்த்து வந்த அவரது கூந்தலை இன்று வெட்டியுள்ளார்.