டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு – குடிநீர் ஆணையம்
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாக குடிநீர் ஆணையம் தெரிவித்துள்ளது.இதனை குடிநீர் ஆணையத் துணைத் தலைவர் ராகவ் சாதா தெரிவித்துள்ளார்.
டெல்லியின் வடக்கு,தெற்கு,மேற்கு,மத்திய பகுதியில் குடிநீர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட உள்ளது.இதற்கு காரணம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஹரியாணா செயல்படுத்தவில்லை என்பதே ஆகும்.
ஹரியாணா டெல்லிக்கு குடிநீர் பகிர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இதனை ஹரியாணா செய்யத் தவறியதால் தற்போது இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.