பாஜக நிர்வாகிக்கும் பிரச்சார தடை! தேர்தல் ஆணையம் அதிரடி
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் சர்ச்சைகளுடன் தான் நடைபெற்று வருகிறது. இன்னும் 4 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ள நிலையில், நடந்து முடிந்த நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது, வன்முறை வெடித்தது, பாதுகாப்பு படையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து, கருத்து தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 24 மணிநேரம் பிரச்சாரத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து, பாஜக நிர்வாகி ராகுல் சின்ஹா அங்கு 4 பேரை சுட்டுக் கொன்றதற்குப் பதில் 8 பேரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என தெரிவித்ததாக புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து, ராகுல் சின்ஹாவிற்கும் 2 நாட்கள் பிரச்சாரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.