மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் – அமித்ஷா

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. நடைபெற்ற அனைத்து கட்ட வாக்கு பதிவின் போதும் வன்முறை வெடித்தது.

ஆனால், நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது, வன்முறை வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பொது மக்களில் நான்கு பேர் இறந்தனர். இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு படை வீரர்கள் அமித்ஷாவின் பேச்சைக் கேட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது, அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பசிர்ஹாட்டில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அமித்ஷா, “மேற்கு வங்க மக்கள் சொன்னால் நான் எனது பதிவியை ராஜினாமா செய்யத் தயார். எப்படியும் இந்த தேர்தலில் திரிணாமூல் தோற்று விடும். மே 2 ஆம் தேதி மம்தா தான் பதிவி விலக தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *