கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும்! மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்
தலைநகர் டெல்லியில், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் 135 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை, விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 11 கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், எந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தற்போது, கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீசி வரும் நிலையில், மக்கள் கூட்டமாக இருப்பது, கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே, விவசாய சங்கத்தினர் போராட்டங்களைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.