மம்தாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், பாஜக கட்சியினருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடி நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வாக்காளர்கள் 4 பேர் இறந்துள்ளனர். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து, மம்தா மத்திய பாதுகாப்பு படையினர் அமித்ஷாவுக்காக வேலை செய்கிறது என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தேர்தல் விதிமீறல். இது குறித்து விளக்கம் தெரிவிக்க வேண்டும் என மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு, மம்தா “மத்திய ஆயுத காவல் படைக்கு எதிராக வாக்காளர்களை திரட்டுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை நான் மீறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.